Skip to main content

நாடார் (சாணார்) சமூகத்தின் வரலாறு கருப்பா? காவியா ? - நாடார் வரலாறு | Nadar Caste History

 Casete Oppressions Faced by Nadar Caste in Travancore. Breast tax on nadar caste, Nadar caste History, Nadar Caste Dravidian History Thanthai Periyar, Travancore Nadar Ezhava Brahmin Caste oppression, Travancore breast tax by Brahmin


இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகிற சாணார்கள் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள். 

"சக்கிலியனைத் தொட்டாதான் தீட்டு, ஆனால் சாணானைப் பார்த்தாலே தீட்டு" என்று ஓரங்கட்டப்பட்ட சமூகம். 

 ஆனால் இப்போது குமரி மாவட்ட பாஜக வின் செங்கற்கள் இவர்களே.! சடை.. படை.. என்று பேசித் திரிந்த பழைய தமிழிசையும், மார்த்தாண்டத்தில் இரண்டரை வருடங்களாக விசித்திர பாலமொன்றை கட்டி, ஓராண்டுக்குள் குண்டும் குழியுமாக தேசிய நெடுஞ் சாலையை மாற்றிய பொறியியல் வல்லுநர் பொன்னாரும் இந்த சாணார் குலக் கொழுந்துகளே!

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி.

மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொகை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த ஐயா முத்துக் குட்டி என்பவர்.

தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே.

கருநீசன்” என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட அரையாடை சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ஆதிக்கத்திலிருந்து விடுதலை...... 1800 களில் (சாணார்) பெண்கள் நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! 

பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும்.திருவிதாங்கூர் மன்னன்ந கர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். (அவளுகளுக்கு அப்படி என்ன எரிச்சலோ) மீறி, மானம் மறைத்த முலைகள் அறுபட்டு வீழ்ந்தன. பொதுச் சந்தைகளில் அயினிப் பழம் பறிப்பது போல முலைகளைப் பறித்தார்கள்.! முலைகளின் அளவிற்கு ஏற்ப "முலை வரி" விதிக்கப் பட்டது.! இந்தக் கொடுமைக்கு எதிராக பெண்கள் கொதித்து எழுந்தார்கள். போராட்டம் வெடித்தது.!

அவ்வப்போது போராட்டங்களும் அடக்கு முறைகளும் தொடர்ந்தன. இந்நிலையில் மீட் 'எனும் ஆங்கில பாதிரியாரின் முயற்சியால் 1823 இல் கிறிஸ்தவ பெண்கள் குப்பாயம் எனும் மேலாடை அணியலாம் என்று உத்தரவாயிற்று. தன்மானமுள்ள நாடார் பெண்கள் மானத்தை மறைக்க கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தனர்! கிறிஸ்தவம் திருவாங்கூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புனிததோமாவால் தொடர்ந்த நிலைமாறியது. ஹிந்து நாடார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த மானமுள்ள நாடார்களும் குப்பாய உரிமைக்காக வெகுண்டு எழுந்தார்கள்! ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிந்து தனிமதமேகண்டார். கலவரங்கள் தொடர்ந்தன! வழக்குகளும் தொடர்ந்தன. மானம் காக்க நாஞ்சில் மண் முழுவதும் மனிதப் பலி கொடுத்தார்கள். 37 வருட போராட்டத்திற்கு பிறகு ஆங்கிலேயர்களின் நெருக்கடிக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் பணிந்தது! 


1859 ஆம் ஆண்டு அனைத்து பெண்களும் குப்பாயம் அணியலாம் என்று மன்னன் உத்தரவிட்டான். இதில் 18ஜாதிகள் அடக்கம்.. அத்தகைய வீர மூதாதையருக்கு பிறந்த மூதேவிகள் தான் இன்றும் பார்ப்பனரின் குண்டிகளுக்கு குடை பிடித்துக் கொண்டு திரிகின்றன. மருத்துவம்* 1820 களில் ஆரம்பித்த காலரா தொற்று நோயால், இந்தியா முழுவதும் பிணங்கள் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருந்தன! மருந்தே இல்லாத காலராவிற்கு பலியானவர்கள் 15 இலட்சம் பேரென்று புள்ளி விபரம் சொல்கிறது! அந்த நேரத்தில் மெடிக்கல் மிஷனால் 1838 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது தான் நெய்யூர் மருத்துவ மனை! உலகின் பழமையான மிஷன் மருத்துவ மனை.! 

இந்தியாவின் முதல் புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் என்று அதற்கு அளவில்லாத பெருமைகள் உண்டு. டாக்டர். தாம்சன், டாக்டர். வேத மாணிக்கம் ஆகியோரால் 1883 ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் கட்டப் பட்டது. மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை. ( பொன்னாரின் சிலுவைப் பாலம் ஆரம்பிக்கிற இடம்) 1895 இல் சால்வேஷன் ஆர்மியால் வடசேரியில் கட்டப் பட்டது கேத்ரின் பூத் மருத்துவ மனை! 


1936 இல் குளச்சலில் கட்டப் பட்டது சார்லஸ் பீஸ் தொழுநோய் மருத்துவ மனை.! இன்னுமுண்டு பட்டியல்.! இன்று போல கிட்னியை விற்று கல்லீரலை ரிப்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை அத்தனையும் இலவச மருத்துவ மனைகள்.! நாஞ்சில் மண்ணில் காலராவிற்கு தப்பித்த யாரோ ஒருவனின் சந்ததி தான் நம்மிடம் "பார்.. பார் .! குஜராத்தை பார்" என்று அக்குளை சொறிகிறான்.! கல்வி !!!. நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ மிஷினறி பள்ளிக் கூடங்களை குறித்து தனித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை! இலவசகல்வி வழங்கிய பல பள்ளிக் கூடங்கள் நூறு வயதைக் கடக்கின்றன.இது மதம் சார்ந்த பதிவல்ல ஆனால் ஒரு மதத்தின் ஒடுக்கமுறையிலிருந்து மீண்ட சமூகம் இன்று அதே சூழ்ச்சியால் மீண்டும் கலவர பூமியாக மாறமால் சமூக நல்லிணக்கத்தோடு இருக்கதான் இந்த வரலாறு.

Comments

Popular posts from this blog

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

  ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது. வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்...

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

  சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி. ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற...

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

  “கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாப்பதற்காக, கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” – காமராசர் மீதான கொலை முயற்சி மேலும் தொடராதிருக்க பெரியார் தனது தொண்டர் படையிடம் இட்ட கட்டளை. “இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்” – காந்தியார் கொலை நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்க பெரியார் இந்திய சமூகங்களின் முன் வைத்த வேண்டுகோள். காமராசர் மீதான கொலை முயற்சியும், காந்தியடிகள் உயிர் பறித்த நிகழ்வும் வேறு வேறான காரணங்களில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அடிப்படைவாதக் கும்பலின் வேரான சனாதனத்தை அசைத்துப் பார்த்ததால் மனுதர்மத்தை நிலைநிறுத்தத் துடித்த கும்பல் மேற்கொண்ட வெறியாட்டமே இவைகள். அதற்கு மேற்பூச்சுக் காரணமாக அமைந்தவையே பசுவதைத் தடுப்புச் சட்டப் போராட்டம் வழியே காமராசர் மீது ஏவப்பட்ட கொலை முயற்சியும், இந்தியப் பிரிவினைக்கு காந்தி வித்திட்டார் என்பதற்காக கொன்றதாக கோட்சே கூறிய சாட்சியும்.   காமராசர் மீதான கொலை முயற்சி: அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிய சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் ...