அகில இந்திய ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி கல்வியில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது தந்தை பெரியார் | Thanthai Periyar Brought Education Reservation to All India OBC, SC, ST communities

இந்திய வரலாற்றிலேயே பார்ப்பனர்களையும் சேர்த்து 100% இடஒதுக்கீட்டை 14.09.1928ல் கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசு. அன்று முதல் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த சில வாரங்களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு பார்ப்பனர்கள் வழக்கு தொடுக்கிறார்கள்.
1.சி.ஆர் ஸ்ரீநிவாஸ் என்ற பார்ப்பனர் எனக்கு பொறியியல் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுக்கிறார். 2.செண்பகம் துரைராஜ் என்கிற பார்ப்பன பெண் எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை தாமாக முன்வந்து நடத்தியவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இருந்த பார்ப்பனர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பார்ப்பன பெண்மணி விண்ணப்ப வயதை கடந்துவிட்டார். மற்றொன்று கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை.
இந்த வழக்கில் தான் இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இட ஒதுக்கீடு என்பது பிரிவு 29(2)க்கு விரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
இதைத் கண்டு கோபமடைந்த பெரியார் 1950 ஆகஸ்ட் 14 வகுப்புரிமை நாளாக அறிவித்து போராட அழைத்தார். மேலும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி 3.12.1950ல் வகுப்புரிமை மாநாட்டை திருச்சி பெரியார் மாளிகையில் கூட்டினார். பெரியாரின் அழைப்பை ஏற்று பல்வேறு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.
வகுப்புரிமை கிளர்ச்சி துவக்க நாள் என்று பெரியார் துவக்கினார். சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த 07.08.1950ல் கூடத்தில் 50,000 மக்கள் கலந்துகொண்டனர் அந்த கூட்டத்தில் பெரியார் அனைத்து தரப்பு மக்களையும் போராட அழைத்தார்.
தமிழ்நாடு எங்கும் மாணவர்கள் போராட்டம், கடையடைப்பு என்று தமிழ்நாடு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மற்றொரு பக்கம் காமராஜர், படேல் போன்றோர் நேருக்கு நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அம்பேத்கரும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
சட்ட திருத்த அறிமுக உரையில் நேரு இவ்வாறு குறிப்பிட்டார். "சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் நம்மைச் சட்ட திருத்தம் செய்ய வழியுறுத்துகிறது", "in Madras province" என்றார். தமிழ்நாட்டில் எதிர்ப்பை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு 01.06.1951ல் முதல் முறையாக திருத்தப்படுகிறது. பிரிவு 15(4) என்று புதிதாய் சேர்க்கப்படுகிறது.
பிரிவு 15(4) : “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடிமக்கள் எவரையும் அல்லது பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை முன்னேற்றுவதற்காக எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதிலிருந்து அரசை இந்தப் பிரிவு உள்ள எதுவும் அல்லது பிரிவு 29(2) தடுக்காது”
அதுவரை பிரிவு 16(4) வெறும் வேலை வாய்ப்பில் மட்டுமே இட ஒதுக்கீட்டு உறுதி செய்யப்பட்டது. முதல் சட்ட திருத்தத்திற்கு பின்தான் கல்வியில் இட ஒதுக்கீடு வந்தது. அதன்பின் தான் தாழ்த்தப்பட்டோருக்கும், பிறப்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்கள் படிக்க காரணம் பெரியார் தான்.
இதில் தி.மு.க-வின் பங்கும் அதிகம் யாராவது "திராவிடம் தான் எங்களை படிக்க வைத்ததா? மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை பெரியாரா படிக்க வைத்தார்? தாழ்த்தப்பட்ட மக்களை பெரியாரா படிக்க வைத்தார்?" என்று கேட்டால், ஆம்! என்று பதில் சொல்லுங்கள்.
ஆதார நூல்கள்:-
- முதல் சட்ட திருத்தம் ஏன்? எதற்காக? - தோழர் ஆசிரியர் வீரமணி
- இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு - கொளத்தூர் மணி
Comments
Post a Comment